Quarterly Exam Questions & Answers 2026 - 2027

5th standard Tamil Quarterly Exam Original Question paper with answer key 2026

5-ஆம் வகுப்பு தமிழ்: முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் மற்றும் விடைகள் (2026-27)

தமிழகப் பள்ளிகளில் நடைபெறும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026-27 ஆம் ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) தமிழ் வினாத்தாள் மற்றும் அதற்கான முழுமையான விடைகள் (Answer Key) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையிலும், மொபைல் போனில் பார்ப்பதற்கு வசதியாகவும் வடிவமைத்துள்ளோம்.

வகுப்பு 5-ஆம் வகுப்பு
பாடம் தமிழ்
தேர்வு தொகுத்தறி மதிப்பீடு - பருவம் 1 (2026-27)
மொத்த மதிப்பெண்கள் 60 மதிப்பெண்கள்

தொகுத்தறி மதிப்பீடு (2026 - 27)

தமிழ் - வகுப்பு 5 - பருவம் 1

நேரம்: 2 மணி மதிப்பெண்: 60

1. கொடுக்கப்பட்டுள்ள சொல்லிலிருந்து புதிய சொற்கள் உருவாக்குக. 5 x 1 = 5

அ) களர்நிலம் - களர், நிலம்
ஆ) நெல்லிக்கனி - நெல்லி, கனி
இ) நாள்தோறும் - நாள், தோறும்
ஈ) சுற்றுச்சூழல் - சுற்று, சூழல்
உ) காஞ்சிபுரம் - காஞ்சி, புரம்


2. அட்டவணையை நிரப்புக. (எழுவாய், பயனிலை) 5 x 1 = 5

சொற்றொடர் எழுவாய் பயனிலை
அ) செம்மல் போட்டியில் வென்றான். செம்மல் வென்றான்
ஆ) கதிரவன் பழமொழி கூறினான். கதிரவன் கூறினான்
இ) இளம்பரிதி கடைக்குச் சென்றான். இளம்பரிதி சென்றான்
ஈ) ஆதிரை கவிதை எழுதினாள். ஆதிரை எழுதினாள்
உ) பறவைகள் வானில் பறந்தன. பறவைகள் பறந்தன

3. சொற்களை முறைப்படுத்தித் தொடர் அமைத்து எழுதுக. 5 x 1 = 5

அ) கற்றவர்க்கு / கல்வி / சென்ற / சிறப்பு / இடமெல்லாம்
விடை: கல்வி கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆ) பூத்திருந்தன / வண்ணப்பூக்கள் / பூச்செடிகளில்
விடை: பூச்செடிகளில் வண்ணப் பூக்கள் பூத்திருந்தன.

இ) மரத்திலிருந்து / கிளி / பறித்துப்போட்டது / மாங்காயை
விடை: கிளி மரத்திலிருந்து மாங்காயைப் பறித்துப்போட்டது.

ஈ) காகத்திடமிருந்து / நரி / பிரிக்க எண்ணியது / மானை
விடை: நரி காகத்திடமிருந்து மானைப் பிரிக்க எண்ணியது.

உ) பொருளும் / கல்வியும் / நல்வாழ்வு / உதவும் / வளம் பெற
விடை: கல்வியும் பொருளும் நல்வாழ்வு வளம் பெற உதவும்.


4. உரிய சொற்களால் நிரப்புக. 5 x 1 = 5

அ) சிங்கத்தைப் பார்த்த மான் கன்று (கன்று/குட்டி) பயந்து ஓடியது.
ஆ) விளையாடிய சிறுவர்களைப் பார்த்து நாய் குரைத்தது (கத்தியது / குரைத்தது)
இ) பாட்டி திண்ணையில் அமர்ந்து கூடை முடைந்தார் (முடைந்தார் / நெய்தார்)
ஈ) முகிலன் பள்ளியில் காலை உணவு உண்டான் (தின்றான் / உண்டான்)
உ) சிட்டுக்குருவி வேப்பமரத்தில் கூடு (கூடு / வலை) கட்டியது.


5. பிழைநீக்கி எழுதுக. 5 x 1 = 5

அ) மரத்தில் அணில்கள் ஓடிப்பிரந்து விளையாடின.
விடை: மரத்தில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின.

ஆ) அழகனின் குறிப்பேடு மேசையில் இருக்குது.
விடை: அழகனின் குறிப்பேடு மேசையின் மீது இருக்கிறது.

இ) கிளி மாங்காய் பறித்துத் தின்றது.
விடை: கிளி மாங்காயைப் பறித்துத் தின்றது.

ஈ) புலி குரங்கைப் பார்த்து உருமியது.
விடை: புலி குரங்கைப் பார்த்து உறுமியது.

உ) கல்வி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
விடை: கல்வி கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.


6. சொல்லுக்குரிய பொருளை வட்டமிடுக. 5 x 1 = 5

1) நல்கிய     - அ) வழங்கிய    ஆ) கூறிய    இ) விளங்கிய    ஈ) மாற்றிய
2) ஓசை        - அ) ஒளி    ஆ) அலை    இ) ஒலி    ஈ) கலை
3) உறுமீன்    - அ) சிறிய மீன்    ஆ) விண்மீன்    இ) பெரிய மீன்    ஈ) வானமீன்
4) கொற்றவன் - அ) தளபதி    ஆ) வீரன்    இ) மன்னன்    ஈ) அமைச்சர்
5) மேன்மை   - அ) தன்மை    ஆ) சிறப்பு    இ) வளமை    ஈ) திறமை


7. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 5 x 1 = 5

அ) சத்துருண்டை - பாட்டி எனக்குச் சத்துருண்டை கொடுத்தார்.
ஆ) அமைதி - வகுப்பறையில் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும்.
இ) பழைமை - நாங்கள் பழைமை வாய்ந்த கோயிலுக்குச் சென்றோம்.
ஈ) முன்னேற்றம் - கல்வி கற்பதால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
உ) குதிரைகள் - குதிரைகள் மைதானத்தில் வேகமாக ஓடின.


8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. 5 x 1 = 5

நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் -தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

1) தென்னை நல்கிய _________
அ) நுங்கு    ஆ) பதநீர்    இ) இளநீர்    ஈ) பன்னீர்

2) என்னுயிர் என்பேன் எனக் கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார்?
அ) பசுவை    ஆ) தென்னை    இ) இளநீரை    ஈ) தமிழை

3) 'மிகுதி' என்ற பொருளுக்கான சொல்
அ) நனி    ஆ) சுளை    இ) சுவை    ஈ) விளை

4) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) கரும்பு-சாறு    ஆ) தென்னை-இளநீர்    இ) பலா-சுளை    ஈ) பசு-தேன்

5) இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை: இனியன - நனிபசு, தென்னை - என்னுயிர் - என்பேன்


9. தொடர்களை வரிசைப்படுத்தி எழுதுக. 5 x 1 = 5

அ) தங்கமதி ஒரு நாணயம் என்றாள்.
ஆ) ஆனால், உண்டியலில் 200 நாணயங்கள் மட்டுமே போட முடியும்.
இ) என்னிடம் 250 நாணயங்கள் இருக்கின்றன.
ஈ) ஏனெனில், ஒரே ஒரு நாணயத்தைப் போட்டவுடன் உண்டியல் காலியாக இருக்காது.
உ) அப்படியெனில், காலியான உண்டியலில் ஒவ்வொரு நாணயமாக எத்தனை போட முடியும்? என்றார் பாட்டி.

சரியான வரிசை:
1. (இ) என்னிடம் 250 நாணயங்கள் இருக்கின்றன.
2. (ஆ) ஆனால், உண்டியலில் 200 நாணயங்கள் மட்டுமே போட முடியும்.
3. (உ) அப்படியெனில், காலியான உண்டியலில் ஒவ்வொரு நாணயமாக எத்தனை போட முடியும்? என்றார் பாட்டி.
4. (அ) தங்கமதி ஒரு நாணயம் என்றாள்.
5. (ஈ) ஏனெனில், ஒரே ஒரு நாணயத்தைப் போட்டவுடன் உண்டியல் காலியாக இருக்காது.


10. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 5 x 1 = 5

மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி

முதல் பரிசு ரூ.5000/- | இரண்டாம் பரிசு ரூ.3000/- | மூன்றாம் பரிசு ரூ.2000/-
கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்புப் பரிசாகக் கதைப் புத்தகம் வழங்கப்படும்.

குறிப்புகள்:
❖ கதைகள் 700 முதல் 1000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
❖ கதைகள் உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
❖ உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
❖ ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப வேண்டும்.
❖ கதைகளை மாத இறுதிக்குள் அனுப்பினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கலைமதி புத்தக நிலையம், வேலூர்.

1) ஒருவர் எத்தனை கதைகளை அனுப்ப வேண்டும்?
அ) ஒரு கதை    ஆ) மூன்று கதைகள்    இ) இரண்டு கதைகள்    ஈ) நான்கு கதைகள்

2) கபிலன் பரிசுத்தொகையிலிருந்து ரூ. 4000 க்கு புத்தகங்கள் வாங்கினான் எனில், அவன் போட்டியில் பெற்றது _______
அ) முதல் பரிசு (ரூ.5000 வென்றதால்)    ஆ) இரண்டாம் பரிசு    இ) மூன்றாம் பரிசு    ஈ) ஏதுமில்லை

3) கலைமதி புத்தக நிலையம், மாணவர்களுக்காக சிறுகதைப் போட்டி நடத்துகிறது.

4) போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் பெறும் பரிசு கதைப் புத்தகம்.

5) போட்டிக்கான குறிப்புகளுடன் நீங்கள் சேர்க்க விரும்பும் குறிப்பு ஒன்று:
விடை: "கதைகள் எழுத்துப்பிழையின்றித் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்."


11. சொற்களைப் பயன்படுத்தி பத்தியை உருவாக்குக. 1 x 5 = 5

(சொற்கள்: நான், நாளை, சென்றேன், விடுமுறை, மிதிவண்டியில், மாமா, வந்தேன், படித்தான், தேர்வுக்கு, தாத்தாவிடம், நேற்று, பேருந்து, பள்ளிக்கு, அப்பாவுடன், காத்திருந்தேன்)

நேற்று எனக்கு விடுமுறை. நான் அப்பாவுடன் மிதிவண்டியில் மாமா வீட்டிற்குச் சென்றேன். அங்கு தாத்தாவிடம் கதைகள் கேட்டுக் காத்திருந்தேன். என் தம்பி நாளை நடக்கும் தேர்வுக்குப் படித்தான். பிறகு அங்கிருந்து பேருந்து மூலம் வீடு வந்து சேர்ந்தேன். நாளை நான் பள்ளிக்குச் செல்வேன்.


12. கதையைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க. 1 x 5 = 5

ஓர் ஆற்றங்கரையில் தவளையும் எலியும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் தவளை ஆற்றில் விளையாடிக் கொண்டிருப்பதை எலி பார்த்தது. உடனே எலி தவளையிடம் எனக்கு நீச்சல் கற்றுத்தர முடியுமா? என்று கேட்டது. அதற்குத் தவளை...
"கண்டிப்பாகக் கற்றுத் தருகிறேன். நீ என் முதுகில் ஏறிக்கொள்" என்றது. எலி மகிழ்ச்சியுடன் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை மெதுவாக ஆற்றில் நீந்தி எலிக்கு நீச்சல் கற்றுத் தந்தது. சில நாள்களிலேயே எலியும் நன்றாக நீந்தக் கற்றுக்கொண்டது. அதன்பின், எலியும் தவளையும் ஆற்றில் ஒன்றாக நீந்தி மகிழ்ந்தன.

Share: