July 1, 2025 – நடப்பு நிகழ்வுகள் தமிழில்
📘 Daily Current Affairs for TNPSC, Group 2, Group 4, VAO
📚 Read Also:
முக்கிய நிகழ்வுகள் – July 1, 2025
✰ கோவா கப்பல் கட்டும் நிறுவனம் லிமிடெட் (GSL) தயாரித்த எட்டுக் கப்பல்களின் வரிசையில் 'ஆதம்யா' என்ற முதலாவது விரைவு ரோந்துக் கப்பலினை (FPV) இந்தியக் கடலோரக் காவல்படையில் (ICG) இணைத்துள்ளது.
✰ APEDA (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) ஆனது, இந்தியாவின் முதல் ஒரு டன் எடையிலான ரோஜா வாசனை கொண்ட லிச்சிப் பழங்கள் தொகுப்பினைப் பஞ்சாபின் பதான்கோட்டில் இருந்து தோஹாவிற்கு (கத்தார்) அனுப்பியுள்ளது.
✰ பிரக்ஞானந்தா தாஷ்கண்டில் (உஸ்பெகிஸ்தான்) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் போட்டியில் வென்று உலக அளவில் 4வது இடத்தையும் இந்தியாவின் மிக உயர்ந்தத் தரவரிசையில் உள்ள சதுரங்க வீரராகவும் ஆனார்.
✰ வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக, முக்கியமாக துபாய், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தான் நாட்டில் உற்பத்தி ஆகும் பொருட்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்காக "டீப் மேனிஃபெஸ்ட் நடவடிக்கையினை" தொடங்கியது.
✰ கேரளாவில் 2022 ஆம் ஆண்டில் 5,315 பாதிப்புகள் மற்றும் 290 உயிரிழப்புகளாக இருந்த எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் 5,980 பாதிப்புகள் மற்றும் 394 உயிரிழப்புகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
✰ 2025 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதி வரையில் 1,451 பாதிப்புகள் மற்றும் 74 உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.
✰ ராஜஸ்தான் ரந்தம்போர் அருகே அமைந்துள்ள டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில் இந்தியா தனது முதல் விலங்குகளுக்கான மேம் பால வழித் தடத்தினைத் தொடங்கியுள்ளது.
✰ இதில் ஐந்து வனவிலங்கு மேம்பாலங்களைக் கொண்டும், விலங்குகளின் மிகவும் பாதுகாப்பான நடமாட்டத்திற்கான நாட்டின் மிக நீளமானச் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.
சர்வதேசச் செய்திகள்
✰ 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு
இந்தியா உட்பட ஆசிய-பசிபிக் பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள் பாங்காக்கில் ஒரு முக்கிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன.
✰ 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்துப் பிறப்புகளும் பதிவு செய்யப் படுவதையும் அனைத்து இறப்புகளும் பதிவு செய்யப் படுவதையும் உறுதி செய்வதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
✰ தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற குடிமைப் பதிவு மற்றும் முக்கியப் புள்ளி விவரங்கள் (CRVS) தொடர்பான மூன்றாவது அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஒரு முடிவு ஆனது மேற்கொள்ளப்பட்டது.
✰ CRVS என்பது ஒரு சட்ட அமைப்பின் கீழ் பிறப்புகள், இறப்புகள், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ பதிவைக்குறிக்கிறது.
✰ CRVS புள்ளிவிவரங்கள் கருத்தக்கத்திற்கான பின்னணியில் உள்ள முன்னணி அமைப்பு UN ESCAP (ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம்) ஆகும்.
✰ இந்தத் தீர்மானம் ஆனது, பிறப்பு பதிவு உட்பட அனைவருக்குமான ஒரு சட்டப் பூர்வ அடையாளம் 16.9 என்ற SDG இலக்கினை ஆதரிக்கிறது.
✰ 2012 ஆம் ஆண்டு முதல், பதிவு செய்யப் படாத ஐந்து வயத்திற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 135 மில்லியனிலிருந்து 51 மில்லியனாகக் குறைந்துள்ளது.
✰ 29 நாடுகள் தற்போது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிறப்புகளைப் பதிவு செய்கின்றன. மேலும் 30 நாடுகள் இறப்புகளுக்கும் அத்தகைய சதவீதத்திலானப் பதிவுகளைப் பதிவு செய்கின்றன.
✰ இந்த முன்னேற்றம் பதிவவாகியிருந்த போதிலும், 14 மில்லியன் குழந்தைகள் இன்னும் ஒரு வயதிற்குள் தங்கள் பிறப்புகளைப் பதிவு செய்யவில்லை.
✰ ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6.9 மில்லியன் உயிரிழப்புகள் பெரும்பாலும் மருத்துவ மனைகளுக்கு வெளியே அல்லது தொலைதூரப் பகுதிகளில் பதிவு செய்யப்படாமல் போகின்றன.

🔔 குறிப்புகள்:
இவை TNPSC, SSC, RRB, UPSC போன்ற தேர்வுகளுக்குப் பயனுள்ள முக்கியமான நடப்பு நிகழ்வுகள் ஆகும். தினமும் படிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இவை TNPSC, SSC, RRB, UPSC போன்ற தேர்வுகளுக்குப் பயனுள்ள முக்கியமான நடப்பு நிகழ்வுகள் ஆகும். தினமும் படிக்க பரிந்துரைக்கப்படுகிறது.