முதல் இடைப்பருவத்தேர்வு - 2025
மதிப்பெண்கள்: 50 நேரம்: 1.30 மணி 10ஆம் வகுப்பு - தமிழ்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
2. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
அ) எந்+தமிழ்+நா
ஆ) எந்த + தமிழ் +நா
இ) எம் + தமிழ் +நா
ஈ) எந்தம் + தமிழ் +நா
3. 'மகிழுந்து வருமா?' என்பது -------
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்ந்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத்தொடர்
4. ”இருக்கும்போது உருவம் இல்லை- இல்லாமல் உயிரினம் இல்லை” புதிருக்கான விடை யாது?
அ) வானம்
ஆ) காடு
இ) நீர்
ஈ) காற்று
5. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (6, 7, 8) விடையளிக்க:
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
6. பாடல் இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) பரிபாடல்
ஈ) பதிற்றுப்பத்து
7. பாடலை இயற்றியவர்
அ) கீரந்தையார்
ஆ) குலசேகராழ்வார்
இ) அதிவீரராம பாண்டியர்
ஈ) பெருங்கெளசிகனார்
8. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.
அ) கரு வளர் - உரு அறிவாரா
ஆ) உரு அறிவாரா - உந்து வளி
இ) விசும்பில் – கருவளர்
ஈ) விசும்பில் – வானத்து
இரண்டு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
9. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
10. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
11. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
12. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
13. 'எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
14. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக:
(குவியல், குலை, மந்தை, கட்டு) – கல், பழம், புல், ஆடு
15. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக:
அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை
ஆ. ஐந்து சால்பு ஊன்றிய தூண்
16. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க
அ. இயற்கை – செயற்கை
ஆ. விதி – வீதி
17. கலைச்சொல் எழுதுக
அ. Vowel
ஆ. Land Breeze
இரண்டு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளிக்க: (வினா எண்: 20 கட்டாய வினா)
18. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
19. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க
20. ”அன்னை மொழியே…” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக (அல்லது) ”மாற்றம்…” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக
இரண்டு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளிக்க:
21. அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றுக:
அறிந்தது, புரிந்தது, தெரிந்தது, பிறந்தது
22. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
23. தொழிற்பெயர் , வினையாலணையும் பெயரை வேறுபடுத்துக
விரிவான விடையளிக்க:
24. (அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
(அல்லது)
(ஆ) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக
25. (அ) “கலைத்திருவிழா” போட்டியில் கலையரசன் பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக
(அல்லது)
(ஆ) தமிழ்மேகன் தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு விண்ணப்பிக்க படிவம் நிரப்பி உதவுக
26. (அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக
(அல்லது)
(ஆ) பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களை நேசிக்கும் பண்பினை விவரிக்க





