இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்..
அனுப்புநர்
சா. சுந்தர்,
த/பெ.ஆ.சங்கர்
34, குறிஞ்சி நகர்,
638 001.
பெறுநர்
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஈரோடு.
மதிப்புக்குரிய அய்யா,
பொருள்: இருப்பிடச் சான்றிதழ் வேண்டுதல் சார்பாக.
வணக்கம் . ஈரோடு, அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். 34, குறிஞ்சி நகர், ஈரோடு 638 001 என்ற முகவரியில் பத்து -ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகின்றோம். அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகின்றது. இத்துடன் குடும்ப அட்டை நகலும் ஆதார் அட்டை நகலும் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
சா. சுந்தர்.
இடம் : ஈரோடு
நாள் : 25.06.2025
உறைமேல் முகவரி:
பெறுநர்
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஈரோடு.