Pages

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் பற்றிய கட்டுரை

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் பற்றிய கட்டுரை 


8th tamil unit 1 Tamil essay - kaithozhil ondrai katrukol - katturai


முன்னுரை :

பெற்ற பிள்ளை உன்னைக் கைவிட்டாலும், கற்ற கல்வி உன்னை கைவிட்டாலும், நீ பழகிய கைத்தொழில் உன்னைக் கைவிடாமல் காப்பாற்றும் என்பது ஆன்றோர் வாக்கு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தி நிற்கிறது.

கைத்தொழிலின் அவசியம்:

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். புள்ளிக் கணக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பார்கள். அது உண்மையே நாம் கற்கும் கல்வியும் நம் எதிர்காலத்திற்கு ஒரு தொழில் கற்றுக் கொடுக்கிறதா என்றால் இல்லை. படித்து முடித்து பட்டம் பெற்று பின்னர் வேலை தேடும் போது தான் தெரியும். ஏதாவது ஒரு கைத்தொழிலாவது கற்று இருக்கலாமே என்று யோசிப்போம்.

கைத்தொழில் வகைகள்:

பாய் பின்னுதல், கூடை பின்னுதல், அலங்கார பொம்மைகள் செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல், மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல், கைபேசி பழுது பார்த்தல் என பலவகைத் தொழில்கள் கைத்தொழிலில் உள்ளன.

கைத்தொழிலின் பயன்கள்:

கைத்தொழில் கற்றால் படித்து வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. கைத்தொழில் கற்ற உடன் வேலை தரும். வீட்டில் உள்ள பொருட்களை நாமே சரி செய்யலாம். கைத்தொழில்களை நாம் கற்றும் அதன் மூலம் பிறருக்கு அதனைக் கற்றுக் கொடுத்தும் பொருள் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

கைத்தொழிலால் தோன்றிய கல்வி:

தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறுதொழில் கல்வி ஆகியவை எல்லாம் கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதொழில் பயிற்சி குறுந்தொழில் பயிற்சிக்காகக் கைத்தொழில்கள் பலவற்றை இன்று தொழிற்கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கின்றனர்.

முடிவுரை :

வறுமையினால் பசி என்று வரக்கூடிய ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, ஒரு தூண்டிலை வாங்கிக் கொடுக்கலாம். அதுதான் அவருடைய வறுமையை நீண்டகாலம் போக்கும். இதுதான் கைத்தொழிலின் சிறப்பாகும்.

கைத்தொழில் கற்போம்!

கவலை இல்லாமல் வாழ்வோம்!!

SSC Revised Annual Planner 2025-26 PDF Download

 SSC Revised Annual Planner 2025-26 PDF Download Staff Selection Commission released the Tentative Annual Planner 2025-26 on its SSC websit...