6th பிரித்து எழுத்து | 6th pirithu ezhuthuga

6th standard 

பிரித்து எழுத்து 



 இப்பதிவு
  6ம் வகுப்பு தமிழ் அனைத்து இயல்களில் உள்ள பிரித்து எழுத்து இடம் பெற்றுள்ளன. போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

6 – ஆம் வகுப்பு
 
  1.  அஃறிணை = அல் + திணை

  2. பாகற்காய் = பாகு + அல் + காய்

  3. அமுதென்று = அமுது + என்று

  4. செம்பயிர் = செம்மை + பயிர்

  5. செந்தமிழ் = செம்மை + தமிழ்

  6. பொய்யகற்றும் = பொய் + அகற்றும்

  7. இடப்புறம் = இடம் + புறம்

  8. சீரிளமை = சீர்மை + இளமை

  9. வெண்குடை = வெண்மை + குடை

  10. பொற்கோட்டு = பொன் + கோட்டு

  11. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்

  12. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே

  13. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்

  14. வேதியுரங்கள் = வேதி + உரங்கள்

  15. கண்டறி = கண்டு + அறி

  16.  ஓய்வற = ஓய்வு + அற

  17. ஆழக்கடல் = ஆழம் + கடல்

  18. விண்வெளி = விண் + வெளி

  19. நின்றிருந்த = நின்று + இருந்த

  20. அவ்வுருவம் = அ + உருவம்

  21. இடமெல்லாம்= இடம் + எல்லாம்

  22. மாசற = மாசு + அற

  23. கைப்பொருள் = கை + பொருள்

  24. பசியின்றி = பசி + இன்றி

  25. படிப்பறிவு = படிப்பு + அறிவு

  26. நன்றியறிதல் = நன்றி+அறிதல்

  27. பொறையுடைமை = பொறுமை+உடைமை

  28.  பாட்டிசைத்து = பாட்டு+இசைத்து

  29. கண்ணுறங்கு = கண்+உறங்கு

  30. போகிப்பண்டிகை = போகி+பண்டிகை

  31. பொருளுடைமை = பொருள்+உடைமை

  32. கல்லெடுத்து = கல் + எடுத்து

  33.  நானிலம் = நான்கு + நிலம்

  34. கதிர்ச்சுடர் = கதிர்+சுடர்

  35. மூச்சடக்கி = மூச்சு+அடக்கி

  36. மின்னணு  = மின் + அணு

  37.  விரிவடைந்த = விரிவு+அடைந்த

  38. நூலாடை = நூல்+ஆடை

  39. தானென்று = தான் + என்று

  40. எளிதாகும் = எளிது + ஆகும்

  41. பாலையெல்லாம் = பாலை+எல்லாம்









Previous Post Next Post