தினம் ஒரு திருக்குறள் - thinam Oru thirukual


தினம் ஒரு திருக்குறள் - thinam Oru thirukual
தினம் ஒரு திருக்குறள் - thinam Oru thirukual



 குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]


பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

அன்பிற்கும் ஒருவர் மீது கொண்ட அன்பிற்கு

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உண்டோ -  வலிமை இருக்கிறதா ?

அடைக்கும் - அடைத்தல் சேர்த்தல்; தடுத்தல் பூட்டல்; அடைக்கப்படுதல்; மறைத்தல் சாத்துதல் சிறைவைத்தல், காவல்செய்தல்; வேலியடைத்தல்.

தாழ் தாழ்ப்பாள்; சீப்பு; சுவர்ப்புறத்துநீண்டஉத்திரம்; தாழக்கோல், திறவுகோல்; முலைக்கச்சு; நீளம்; வணக்கம்.

அடைக்குந்தாழ் - வெளிக்காட்டாமல் அதனை அடைக்கும் தாழ்ப்பால் / கதவு

ஆர்வம் அன்பு; விருப்பு நெஞ்சு கருதின பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம்; பக்தி ஏழுநரகத்துள்ஒன்று.

ஆர்வலர்  ஒரு குறிப்பிட்ட செயல்பாடு அல்லது விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு நபர்.

ஆர்வலர் - அன்புடையவன்

புன்மைமறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

கணீர் - கண்ணீர்
கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்.

புன்மைமறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

புன்கணீர் - அவர்கள் கண்களில் துளிர்த்து சிந்தக்கூடிய சிறு கண்ணீர்த் துளிகளே

பூசல் -  போர்; பேரொலி; பலரறிகை; கூப்பீடு; வருத்தம்; ஒப்பனை.

தரும் - தருதல் - கொடுக்கும் 

பூசல் தரும் - உரத்துச் சொல்லிவிடும்.

முழுப்பொருள்
உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அன்பிற்கு பிறரிடம் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாதவாரு உண்டோ அடைக்கும் தாழ்/கதவு ? என்று கேட்டு இல்லை என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் அன்புடையவர்கள் (தான் அன்பு கொண்ட) பிறர் துன்பம் படுவதை கண்டு சிந்தும் கண்ணீர் துளியே உலகிற்குப் பறைசாற்றிவிடும் அவர் அவர் மீது எவ்வளவு அன்பு கொண்டு உள்ளார் என்று. 

அதனால் தான் சான்றோன் குணங்களில் முதலாவதாக அன்பு இருக்கிறது
Share: